search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரவிந்த் சுப்பிரமணியன்"

    மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் பதவியில் இருந்து அரவிந்த் சுப்பிரமணியன் ராஜினாமா செய்தது குறித்து ராகுல்காந்தி கேப்டன் (மோடி) வேகமாக தூங்குகிறார் என்று கடுமையாக விமர்சித்துள்ளார். #ArvindSubramanianResigns
    புதுடெல்லி:

    தமிழகத்தைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் அரவிந்த் சுப்பிரமணியன் (வயது59). கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகராக பொறுப்பேற்றார். அவரது பதவிக்காலம் கடந்த ஆண்டே முடிந்த நிலையில் அதே பதவியில் சிறிது காலம் தொடருமாறு அரசு கேட்டுக் கொண்டது.

    இந்த நிலையில் பதவி காலம் முடிய 4 மாதம் உள்ள நிலையில் அரவிந்த் சுப்பிரமணியன் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார்.


    இந்த தகவலை மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். குடும்ப சூழல் காரணமாக அமெரிக்கா செல்ல வேண்டி இருப்பதால் தவிர்க்க முடியாத காரணத்தால் பதவி விலக விரும்புவதாக அரவிந்த் சுப்பிரமணியன் தன்னிடம் தெரிவித்ததாக ஜெட்லி தெரிவித்தார்.

    அரவிந்த் சுப்பிரமணியனின் குடும்ப சூழல் கருதி அவரது ராஜினாமாவை ஏற்றதாக ஜெட்லி தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மோடி அரசை கடுமையாக தாக்கி விமர்சனம் செய்துள்ளார். டுவிட்டர் பதிவில் அவர் கூறி இருப்பதாவது:-


    நிதி மந்திரி (முன்னாள்?) பூட்டப்பட்ட அறையில் இருந்து கொண்டு பேஸ்புக் மூலம் முக்கிய செய்திகளை வெளியிடுகிறார். இந்தியா பொருளாதாரத்தின் சாவி பா.ஜனதா பொருளாளரிடம் இருக்கிறது.

    பா.ஜனதா அரசு மூழ்கும் கப்பல் என்பதால் அதில் இருந்து திறமையானவர்கள் விலகி செல்கிறார்கள். கண்ணுக்கு புலப்படாத கையால் ஆர்.எஸ்.எஸ். தன் வசப்படுத்த பார்க்கிறது.

    அதே நேரத்தில் கேப்டன் டிமோ (மோடி) வேகமாக தூங்குகிறார். இது பைத்திய காரதனமாக உள்ளது.

    இவ்வாறு ராகுல்காந்தி மோடி அரசை தாக்கியுள்ளார். #ArvindSubramanianResigns #RahulGandhi
    தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் திடீரென அந்தப் பதவியில் இருந்து விலகி உள்ளதாக மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி கூறியுள்ளார். #ArvindSubramanian #Resign
    புதுடெல்லி:

    தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் பொருளாதார நிபுணர் அரவிந்த் சுப்பிரமணியன் (வயது 59). இவர் 2014-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகராக பொறுப்பேற்றார். இந்தப் பதவி 3 ஆண்டு காலத்துக்கானது. ஆனால் 3 ஆண்டு முடிந்த பின்னரும், அந்தப் பதவியில் தொடர்ந்து வந்தார்.

    இந்த நிலையில் அவர் திடீரென அந்தப் பதவியில் இருந்து விலகி உள்ளார். இதை மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி, ‘பேஸ்புக்’ பதிவில் தெரிவித்து உள்ளார்.

    அரவிந்த் சுப்பிரமணியன் தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகி உள்ளதாக குறிப்பிட்டு உள்ளார்.

    இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “3 ஆண்டுகள் முடிந்த உடன், அவர் இன்னும் கொஞ்ச காலம் தொடருமாறு கேட்டுக்கொண்டேன். அந்த நேரத்தில்கூட அவர் குடும்ப பொறுப்புக்கும், தற்போதைய பணிக்கும் இடையே அல்லாடுவதாக தெரிவித்தார். இருப்பினும் பணியை அவர் மேலானதாக கருதினார். தனது பொறுப்புகளை மிகச் சிறப்பாக நிறைவேற்றினார். அவர் வேறு வழியின்றி இப்போது என்னை விட்டு விலகி உள்ளார்” என கூறி உள்ளார்.

    மத்திய மந்திரி அருண் ஜெட்லி, தன்னைப்பற்றி கூறி உள்ள கனிவான வார்த்தைகளுக்காக அரவிந்த் சுப்பிரமணியன் நன்றி தெரிவித்துக்கொண்டு உள்ளார். அரவிந்த் சுப்பிரமணியன் மீண்டும் ஆராய்ச்சிப்பணிக்காகவும், எழுத்துப்பணிக்காகவும் அமெரிக்கா செல்வதாக அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.  #ArvindSubramanian #Resign #tamilnews
    ×